மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் – அமைச்சர் திசாநாயக்க!

Wednesday, September 27th, 2017

வடக்கு, கிழக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவனியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை செவிப்புலனற்றோர் சம்மேளனம், யாழ் மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தன. இதன் முடிவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இத்தகைய நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி தெற்கில் உள்ளவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றமை சிறப்பம்சமாகும் என்று அமைச்சர் கூறினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106