பாகிஸ்தானை எதிர்க்க தயாராகியுள்ள இலங்கை !
Wednesday, September 27th, 2017
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இலங்கை கிரிக்கட் அணி முழுமையான தயார் நிலையில் இருப்பதாக, அதன் பயிற்றுவிப்பாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை அபுதாபி சேக் சாயிட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அணியின் வீரர்கள் சிறந்த மனநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி அண்மைக்கால தொடர்களில் சரியாக சோபிக்காத நிலையில், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இதனால் அணியின் வீரர்கள் சோர்வாக இருந்தனர்.
எவ்வாறாயினும், தற்போது வீரர்கள் வெற்றி வேட்கையுடன் சிறப்பாக விளையாடுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வரலாற்றினை நினைவூட்டிய தினேஷ் சந்திமால் !
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பூஜா லியனகே விபத்தில் பலி!
COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!
|
|
|


