பெற்றோருக்கு எச்சரிக்கை!
Monday, September 25th, 2017
18 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் இப்படியான வாகன விபத்துக்களை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைகிறது!
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்?
|
|
|


