அதிசய மலை: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

Saturday, September 23rd, 2017

சீனாவில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாக அதிசய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் குன்றை முட்டையிடும் மலை என்று மக்கள் அழைப்பதாகவும் இந்த குன்றில் கல் முட்டைகள் வெவ்வேறு வடிவில் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. இந்த குன்று 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்டதாகும்.

இந்த குன்றை சுற்றியுள்ள கிராம மக்கள், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகவும் இதன் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளால் ஆனவை என்றும் கூறுகின்றனர்.அத்தோடு இந்த முட்டைகளை ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் கிராம மக்கள் நம்புகிறார்கள்.

கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது தமது வீட்டில் வைத்திருக்கின்றனர். ஆனால், இந்த குன்றில் ஏன் முட்டைகள் உருவாகின்றது என்பது குறித்து ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. விரைவில் இதற்கான அறிவியல் சார்ந்த காரணம் வெளியிடப்படும் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106