வண்ணை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

Friday, September 22nd, 2017
ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை-10.10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று அதிகாலை விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது.  தொடர்ந்து சூரிய பரிதிச் சேவை எனப்படும் சூரிய ஒளிப்பிரகாசத்துடன் சீதேவி, பூமா தேவி சமேதரராக ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள்  உள்வீதி வலம் வந்தார்.
சுப நேரமான முற்பகல்-10.10 மணியளவில் ஆலயப் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றது.
இன்றைய கொடியேற்ற உற்சவத்தில் நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106