வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள் உயர்தரப் பாட­சாலை அணி சம்பியன்!

Friday, September 22nd, 2017

கர­வெட்டி விக்­னேஸ்­வராக் கல்­லூரி தனது நூற்­றாண்டு விழா­வை முன்­னிட்டு வட­ம­ராட்சி பாட­ சாலை­க­ளுக்கு இடை­யில் நடத்­திய வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி சம் பியன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

விக்­னேஸ்­வ­ராக் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­தரப் பாட­சாலை அணியை எதிர்த்து பருத்­தித்­துறை வட இந்து மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது. முதல் பாதி­யாட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­திய பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி முதல் பாதி­யின் முடி­வில் 11:7 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னிலை வகித்­தது. அந்த அணி இரண்­டா­வது பாதியி­லும் தனது ஆதிக்­கத்­தைத் தக்­க­வைத்து முடி­வில் 22:14 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது. ஆட்ட நாய­கி­யாக பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி­யின் வீராங்­கனை கீர்த்­திகாஇ சிறந்த மையப் பிர­தேச வீராங்­க­னை­யாக வட இந்து மக­ளிர் கல்­லூரி அணி­யின் வீராங்­கனை கிரோ­சிகா ஆகி­யோர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106