பாகிஸ்தானுக்கு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, திமுத் கருணாரட்ன , கௌசால் சில்வா , குசல் மெந்திஸ் , சதீர சமரவிக்ரம , ரொஷேன் சில்வா , நிரோசன் திக்வெல்ல , ரங்கன ஹேரத் , லக்ஷான் சந்தகென் , தில்ருவன் பெரேரா , சுரங்க லக்மால் , நுவன் பிரதீப் , விஷ்வ பிரனாந்து மற்றும் லஹிரு கமகே இந்த குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
மேலதிக வீரர்களாக தனஞ்சய த சில்வா , ஜெப்ரி வென்டர்சே , அகில தனஞ்சய , லஹிரு குமார் மற்றும் தசுன் சானக ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் , இந்த இரண்டு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி டுபாயில் இடம்பெறவுள்ளது.டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளையும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இறுதி இருபதுக்கு இருபது போட்டி பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் , பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ள பாதுகாப்பு அறிக்கை குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106