வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
Monday, September 18th, 2017
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தனில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே நேற்றைய தினம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் இளைஞர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவா்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பாிசோதகர் சுமனசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106