கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை!
Monday, September 18th, 2017
நேர மாற்றம் இன்றுமுதல் நடைமுறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை தொடர்ந்து இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி வியானி குணதிலகவும், குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்ஹவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் , குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இடம்பெறும் என்பதனால் தமது நிருவகங்களின் அலுவலக நேரம் அதற்கமைவாக மாற்றப்படுமென்றும் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் உறுதி தெரிவித்தனர்.
நாளை முதல் பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும்.
அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேறும் நேரம் பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106