இன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை!

Monday, September 18th, 2017

அரசாங்க அலுவலகங்களில் நேரமாற்றத்தை மேற்கொள்வதற்கான திட்டம் இன்றுமுதல் பத்தரமுல்ல பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இதற்கமைய, அலுவலக ஊழியர்களுக்கு காலை 7.30 முதல் 9.15 வரை உள்ள காலப்பகுதிக்குள் எந்நேரத்திலும் சேவைக்கு சமூகமளிக்க முடியும்.

இந்த நேர இடைவேளையில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள் வருகை தந்த நேரத்திலிருந்து எட்டு மணி நேர வேலையின் பின்னர், பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்களின் சேவைக்கு தடை ஏற்படாத வகையில் புதிய அலுவலக நேரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனத் தலைமை அதிகாரிகளால் முடியும் என்று அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்

Related posts:

பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை - அகில இலங்கை ...
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 ...
ஜனாதிபதித் தேர்தல் - விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணை...