இலங்கை வான்போக்குவரத்து பிரிவிற்கு பதக்கம்!

Sunday, September 17th, 2017

மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை விமானப்படையின் வான் போக்குவரத்து பிரிவுக்கு ஐ.நா. அமைதிகாப்பு பணிகளுக்கான பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த புதன் கிழமை இடம்பெற்ற இந்த வைபவத்தின் போது ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக சென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மூன்றாவது தொகுதியில் உள்ளடங்கிய ஆறு விமானப்படை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சிகிரிய குன்று பின்னணியில் வர இலங்கையின் பாரம்பரிய நடன மற்றும் வாத்திய கருவிகளின் இன்னிசையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பிராந்தியத்தின் கட்டளைத்தளபதியாக கடமையாற்றும் பிரிகேடியர் ஜெனரல் முஹமட் அப்தெல்பஸ்செட் முஹமட் அலி; , சிறப்பு பிரதிநிதியாக இலங்கை விமானப்படையின் வான் தாக்குதல் நடவடிக்கைகளின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106