மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்களே பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துகின்றனர் – அஸ்கிரிய பீட மகாநாயக்கர் !
Saturday, September 16th, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்களே பௌத்தபௌத்த பிக்குகளை இழிவுபடுத்தி வருவதாக அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ஸ்ரீ வரக்காகொட ஞானரத்ன தேரர் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஆகியோர் பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை கடுமையாக விமர்சித்து தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அஸ்கிரிய பீட மகாநாயக்கர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கண்டிக்கு விஜயம்செய்திருந்த நிலையில் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ஸ்ரீ வரக்காகொட ஞானரத்ன தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதன்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் மகாநாயக்கத்தேரர்கள் உட்பட பௌத்த மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பகிரங்கமாக தெரிவித்துவரும் அறிவிப்புக்கள் குறித்து அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரர் அமைச்சர் ரணதுங்கவிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.
அதேவேளை நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு அனைத்து மக்களும் நிம்மதியாவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திய இராணுவம் உட்பட முப்படையினரை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தி தண்டிக்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் இதற்கு அரசாங்கம் துணை போகின்றதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106