வாட்ஸ்ஆப்பில்  வீடியோ கோல்!

Thursday, May 19th, 2016

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சத்தினை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ கால் சோதனையானது பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் செயலியின் போன் ஐகானை க்ளிக் செய்து வீடியோ கால் மேற்கொள்ள முடியும். முன்னதாக வாய்ஸ்கால் செய்ய வழங்கப்பட்ட இந்த ஐகான் மூலம் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என இரு அம்சங்களை வழங்கும்.

தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. வாட்ஸ்ஆப் வீடியோ கால் அம்சத்தினை உடனடியாக பயன்படுத்த விரும்புவோர் தற்சமயம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு கருவிகளில் முயற்சிக்க முடியும்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்களது ப்ளே ஸ்டோர்களில் இருந்து பூயா எனும் செயலியை கொண்டு பயன்படுத்த முடியும்.

இந்த செயலியை இன்ஸ்டால் செய்ததும் வாட்ஸ்ஆப் காண்டாக்ட், புகைப்படம், மீடியா, கேமரா, வை-பை போன்றவைகளை ஆய்வு செய்யும்.

வீடியோ கால் அம்சத்தினை க்ளிக் செய்தவுடன் காண்டாக்ட்களை இணைக்க லின்க் அனுப்பப்படும். ஒரு வேளை வீடியோ கால் செய்யும் போது செயலியை க்ளோஸ் செய்தால் வீடியோ கால் வாய்ஸ் கால் போன்று மாற்றப்பட்டு விடும்.

பூயா செயலியை பயன்படுத்தி க்ரூப் வீடியோ கால் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் பயன்படுத்த கருவியில் பூயா செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106