யாழ். துன்னாலை வன்முறைச் சம்பவம்: 39 பேரின் விளக்கமறியல் நீடிப்பு 

Saturday, September 9th, 2017

யாழ். துன்னாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கடற்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 39 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்-22 ஆம் திகதி  வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்று(08) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதிபதி திருமதி- நளினி சுதாகரனால் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம்-09 ஆம் திகதி துன்னாலை குடத்தனைப் பகுதியில் மணல் கடத்தி வந்தோர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மாற்றும் கடற்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நேற்றைய தினம் மன்றில் முற்படுத்திய போதே அவர்களது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106