வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Friday, September 8th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவிதித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரிக்கட்டுக் குளத்திலும்,  காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை, மடுக்குளம் ஆகிய பிரதேசங்களிலும், காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுக்கரைப் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:

ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புத...
‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் தொடர்பான சகல கடமைகளில் இருந்தும் விலகுவதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்று...