அதிரடி மன்னர்களுடன் கால்பதிக்கும் டி10 கிரிக்கெட் போட்டி!

Thursday, September 7th, 2017

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் டிசம்பர் 21ஆம் திகதி தொடங்கும் இந்த தொடர், டிசம்பர் 24ம் திகதி முடிவடைகிறது.

10 ஓவர்கள், 7 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேரத்தில் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரில் கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சயீத் அப்ரிடி, குமார் சங்கக்கார, கிறிஸ் கெய்ல், விரேந்தர் சேவாக் ஆகியோர் இந்த தொடருக்கு தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தொடரில் விளையாடவுள்ளனர்.டி10 கிரிக்கெட் லீக் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், பஞ்சாபிஸ், பக்தூண்ஸ், மராத்தா, பங்களாஸ், லங்காஸ், சிந்திஸ், கேரளைட்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பக்தூண்ஸ் அணித்தலைவராக அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.இதுபற்றி டி10 லீக்கின் தலைவர் ஷாஜி உல் முல்க் கூறும்போது, டி10 கான்செப்ட் புதியது என்பதால் இதில் அதிக ஆர்வமாக இருக்கிறோம். இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடக்க இருக்கிறது என தெரிவித்துள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106