உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் !

Thursday, May 19th, 2016

ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் இங்கிலாந்தில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறது.

அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான Harmony Of The Seas என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் தான் தற்போது உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என பெயர் பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினால் கடந்த 32 மாதங்களாக நடைபெற்று வந்த தயாரிப்புப் பணிகள் நேற்றுமுன்தினத்தோடு நிறைவடைந்து, இந்தக் கப்பல் நேற்று இங்கிலாந்தில் உள்ள Southampton துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 1,188 அடி, 215 அடி அகலம் மற்றும் 2,27,000 தொன் எடை உடையதாகும்.

இந்த சொகுசு கப்பலில் 77 நாடுகளை சேர்ந்த 2,100 பணியாளர்கள் உள்ளிட்ட 8,880 பேர் பயணிக்கும் வகையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த கப்பலை தரையில் நிறுத்தினால் பிரான்ஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான உயரம் கொண்டது. நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளும் இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106