மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது!
Friday, September 1st, 2017
யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலி.கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி. கிழக்குப் பகுதிகளூடாகவும் சிற்றூர் சேவைகளானது இடம்பெற்று வந்தது. எனினும், பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வட்டுக்கோட்டையில் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்!
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்!
மனிதக் கடத்தல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன எச்சர...
|
|
|


