வடகொரியாவுடன் பேச்சு கிடையாது – டிரம்ப்!
Friday, September 1st, 2017
வடகொரியாவுடன் இனி பேச்சுக்கள் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஜப்பான் மீது ஏவுகணையை பறக்கவிட்டு, பசுபிக் பெருங்கடலில் விழச் செய்து சோதனை நடத்தியது.இந்த ஏவுகணை அணுஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்கும் திறனுடையது என்றும், அதுமட்டுமின்றி இந்த ஏவுகணை சோதனை குவாம் தீவு மீது தாக்குதல் நடத்துவதற்காக சோதனை செய்யப்பட்டது என்று தகவல்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில், வடகொரியாவிடம் இனி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது என்றும் 25 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தாச்சு இனியும் பொறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
Related posts:
13 ஊடகவியலாளர்களுக்கு சிறை : துருக்கி நீதிமன்றம் அதிரடி!
வெற்றிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் ச...
கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவ...
|
|
|


