துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் 11 பேர் படுகொலை!
Saturday, June 1st, 2019
அமெரிக்காவின் வேர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டடமொன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரி, வேர்ஜினியா நகராட்சி மையத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலின்போது காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளார்.எனினும், அவரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.
இதேநேரம், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒபாமாவை சந்திக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர்!
தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள்!
ரஷிய தலையீடு விவகாரம்: விசாரணைக் குழு முன்பு ஆஜராகத் தயார் - டிரம்ப்!
|
|
|


