ஜப்பான் நிதி ஒதுக்கீட்டில் மண்டைக்கல்லாறு பாலம் நிர்மாணம்!

Thursday, August 31st, 2017

ஜப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பூநகரி மண்டைக்கல்லாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்ட்ட பணிகள் 21 மாதங்களில் நிறைவுபெறவுள்ளன. மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டன.இருப்பினும் பூநகரி முழங்காவில் ஊடாக மன்னார் பிரதான வீதியில் காணப்படுகின்ற மண்டக்கல்லாறு பாலம் அமைந்துள்ள பகுதியில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாது தவிர்க்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து புதிதாக நவீன முறையில் பாலம் அமைக்கும் பணிக்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு ஜப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டு 2016 நவம்பரில் பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 95 மீற்றர் நீளமும், 7.4 மீற்றர் அகலமும், கொண்ட மண்டக்கல்லாறு பாலத்தில் 1.5 மீற்றர்நடைபாதையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இந்த பாலத்தில் பூநகரி சங்குபிட்டி பாலம் போன்று நடுப்பகுதி உயர்வாக கொண்ட பாலமாக அமைக்கப்படவுள்ளது என கூறியுள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106