சனிக்கிழமையிலேயே உள்ளூராட்சி தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

Sunday, August 27th, 2017

உள்ளுராட்சி  தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதியோ அல்லது அதற்கு முந்தைய தினத்திலோ நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டமூலத்திற்கு அமைய, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் 60 தினங்களில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு காண்ப்படுகின்றது

இதனை என்பது நாட்களாக நீடித்துக்கொள்ள முடியும். இதற்கமைய டிசம்பர் மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் தேர்தலை நடத்த முடியும். இந்த தேர்தல் நடத்தப்படுகின்றபோது, சாதாரண தர பரீட்சையை கருத்திற்கொள்ளுதல் வேண்டும்

குறித்த காலத்தில் தேர்தல் நடத்த முடியாமல் போகும்பட்சத்தில், அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இளைஞர்களுக்கான 30 சதவீத ஒதுக்கீடு மற்றும் அரச கள உத்தியோகத்தர்களுக்கு தேர்தலில் போடடியிட முடியாமை போன்ற விடயங்கள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்

இளைஞர்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் விடயம் தொடர்பிலான திருத்தம் கடந்த 24 ஆம் திகதிவரை தேர்தல் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் 25 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது குறித்த விடயம் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் கள உத்தியோகத்தர்கள் மட்டுமல்லாது, முழு அரச பணியாளர்களும் போட்டியிட முடியாது என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழு முன்வைத்திருந்தபோதும், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, கள உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச பணியில் ஈடுபடுகின்றவர்கள் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் சிறந்த ஒரு சேவையை நாட்டுக்காக பெற்றுக்கொள்ள முடியாது என்பதே தமது நிலைப்படாகும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106