பெண்கள் மீது வன்கொடுமையை தூண்டுகிறார் விஜயகலா – ஐ.நா.வில் முறைப்பாடு!

Saturday, August 26th, 2017

சிறுவர் இராஜாங்க அமைச்சு, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா, என்ற கேள்வியுடன்  துறைசார் மற்றும் புத்திஜீவிகள் பெண்களுக்கான அமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மகஜர் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தாம் அதிகம் கரிசனை கொள்வதாகவும் அந்த அமைப்பு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான பால் சமநிலைத்துவம் பேணப்படுவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் , பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் உட்பட சட்டங்களை வலுவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் குறித்த மகஜரில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் இயற்கை நீதிகளுக்கு அமைவாக, வித்தியா படுகொலைக்கு நியாயம் இன்னமும் கிடைக்கப்பெறாமை தொடர்பில் தமது அவதானத்தை குறித்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கின் 9 ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரை காப்பாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்பு தொடர்பிலும் இந்த மகஜரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதிகாரப்போர்வை வித்தியாவிற்கான நீதியைப் புறந்தள்ளும் வாய்ப்புள்ளதாக இந்த மகஜரில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106