கார்களைப் போல பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் விற்பனைக்கு வருகிறது!
Wednesday, May 18th, 2016
கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வீட்டு மின்சாரத்தைக் கொண்டு மின்னேற்றம் செய்துகொள்ளும் வசதியுடன் இரண்டு பேருடன் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
விமானத்தை நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளப்பவும், நினைத்த இடத்தில் செங்குத்தாக கீழே இறக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுகுறித்து “லிலியம்’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேனியல் வீகண்ட் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்,
சாமானிய மக்கள், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தக்கூடிய விமானத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். நாம் உருவாக்கும் விமானங்களுக்கு விமான நிலையங்களின் சிக்கலான செலவு பிடிக்கும் உட்கட்டமைப்பு தேவையாக இராது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலிருந்தே அந்த விமானத்தை பறக்கச் செய்யவும், தரையிறக்கச் செய்யவும் இயலும் வகையில் வடிவமைத்து வருகிறோம். விமானத்தின் இரைச்சலைக் குறைக்க, சாதாரண விமான என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் நகரப் பகுதிகளில் கூட இரைச்சல் மாசுபாடு இல்லாமல் ஏராளமானோர் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும். தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு, தரையிறங்கும் போதும், கிளம்பும் போதும் நீண்டு மடங்கும் சக்கரங்கள், இறக்கை போல் உயர்ந்து இறங்கும் கதவுகள், ஏராளமான இட வசதி, வீட்டு மின்சாரத்திலும் கூட மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன் (பேட்டரி) ஆகிய அம்சங்களை எங்கள் விமானம் கொண்டிருக்கும்.
இந்த விமானம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “லிலியம்’ நிறுவனம் உருவாக்கி வரும் இந்த விமானத்தின் மாதிரி வடிவம் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106