19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 16 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடும்!
Monday, August 21st, 2017
நியூஸிலாந்தில் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குரிய கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது.
நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளும் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான நியூஸிலாந்தும் ஆரம்பப் போட்டியில் மோதவுள்ளன. ஏ குழுவுக்கான இப் போட்டி பகலிரவுப் போட்டியாக டௌரங்கா பே ஓவல் விளையாட்டரங்கில் 2018 ஜனவரி 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானும் அயர்லாந்தும் அண்மையில் புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்றதற்கு முன்பதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்த பத்து நாடுகள் இயல்பாகவே இந்த சுற்றுப் போட்டியில் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றிருந்தன.
இந்த பத்து நாடுகளுடன் இணை அங்கத்துவ நாடுகளில் முன்னிலை வகித்த நமிபியாவும் நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்டிருந்தது.
இந்த 11 நாடுகளுடன் ஐந்து பிராந்தியங்களில் நடைபெற்ற தகுதிகாண் சுற்றுகளில் சம்பியன்களான ஆப்கானிஸ்தான், கனடா, அயர்லாந்து, கென்யா, பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
2017 ஜனவரி 13ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் போட்டியில் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுடன் ஏ குழுவில் தென் ஆபிரிக்காவும் ஆபிரிக்க பிராந்திய தகுதியாளர் கென்யாவும் இடம்பெறுகின்றன.
பி குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, ஸிம்பாப்வே, கிழக்கு ஆசிய பசுபிக் தகுதியாளர் பப்புவா நியூ கினி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
சி குழுவில் பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, நமிபியா ஆகிய நாடுகளும் டி குழுவில் இரண்டு தடவைகள் சம்பினான பாகிஸ்தான், இலங்கை, ஆசிய தகுதியாளர் ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய தகுதியாளர் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் நாடுகள் சுப்பர் லீக் சுற்றில் விளையாட தகுதிபெறும். மற்றைய எட்டு நாடுகள் கோப்பைப் பிரிவு சுற்றில் விளயைாடும். போட்டிகள் க்றைஸ்ட்சேர்ச், குவீன்ஸ்டவுன், டௌரங்கா, வாங்கரெய் ஆகிய நகரங்களிலுள்ள ஏழு மைதானங்களில் நடைபெறும்.
கால் இறுதிகள், அரை இறுதிகள், சுப்பர் லீக் இறுதிப் போட்டி உட்பட 20 போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106