தப்பியோடிய 4300 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கைது.!

Monday, August 21st, 2017

மீண்டும் பணிக்கு திரும்பாதிருந்த 4300 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 777 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதன்படி தற்போது வரை சேவையில் இருந்து தப்பிச் சென்றிருந்த 4377 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளையும் சேர்ந்த 5000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாதுகாப்பு பிரிவின் தரவுகளுக்கு அமைய முப்படைகளையும் சேர்ந்த 36,000 இற்கும் அதிகமானவர்கள் பணியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்து சட்டமுறைப்படி பணியில் இருந்து விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106