அமரர் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Sunday, August 20th, 2017

காலஞ்சென்ற அமரர் செல்வரட்ணம் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மண்டைதீவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

காலஞ்சென்ற அமரர் செல்வரட்ணம் ஜெயபாலசிங்கம் கட்சியின் மண்டைதீவு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயவாணி அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்...
மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாது – வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் – ஈ.பி.டி.ப...
கால்நடை வளர்பாளர்கள் நம்பிக்கை வீண்போகாது - கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் ஈ.பி.டி.ப...