பிரித்தானியாவுக்கு விசா இல்லாமல் பயணமாகலாம் – விரைவில் புதிய அறிவிப்பு!
Friday, August 18th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு விசா இல்லாமல் பயணமாகலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய நாடு எதிர்வரும் 2018 மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக விலக உள்ளது.தற்போது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானிய நாட்டிற்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதுடன் அந்நாட்டில் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும் எவ்வித தடையும் இல்லை.
ஆனால், பிரித்தானியா விலகிய பின்னர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு சுதந்திரமாக பயணமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஒரு முக்கிய திட்டத்தை தீட்டி வருகிறது.
இதன் அடிப்படையில், பிரித்தானியா விலகி பின்னரும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானிய நாட்டிற்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பிரித்தானியா நாட்டில் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், தங்குவதற்கும் அந்நாட்டின் அனுமதியை பெற வேண்டும்.அதே சமயம் விசா இல்லாமல் பிரித்தானிய நாட்டிற்கு செல்லும் ஐரோப்பிய நாட்டினர் பிரித்தானிய நாட்டில் வேலை பெறுவதையும், நீண்ட நாள் வசிப்பதையும் தடுக்க முடியுமா என்ற கேள்வியும் பிரித்தானிய அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பிரித்தானிய அரசின் இத்திட்டம் தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106