நியுசிலாந்தில் குடியுரிமை பெறும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவு!
Tuesday, August 15th, 2017
நியூசிலாந்தில் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொள்ள விரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக நியுசிலாந்து தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகள் குறித்து நியுசிலாந்து குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு 23பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 பேரும் இலங்கையில் இருந்து அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் ஐவருக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இருந்து விண்ணப்பிக்கும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றிக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை நியுசிலாந்தில் அதிக அளவு அகதி அந்தஸ்த்தை சீனர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106