மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்திய புடின்!
Thursday, August 10th, 2017
ஜோர்ஜியாவின் தன்னாட்சி குடியரசான அப்காசியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்தினார்.
ஜோர்ஜிய தலைநகர் திபிலீசிற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜோர்ஜிய பிராந்தியத்தில் ரஷ்யாவின் இருப்பிற்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்ய ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது அப்காசிய ஜனாதிபதி சந்தித்து உரையாற்றிய புடின், அப்காசியாவின் மக்களை பாதுகாப்பதற்காக ரஷ்ய- அப்காசிய கூட்டு இராணுவக் குழுவொன்றை கட்டமைப்பதில் மொஸ்கோ உறுதியாகவுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், அப்காசியாவின் பாதுகாப்பு, தன்னிறைவு மற்றும் சுயாதீனம் என்பவற்றுக்கு தாம் உத்தரவாதம் அளிப்பதுடன், அவை தொடரும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
Related posts:
பிரஸல்ஸ் ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை!
தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி? - மக்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்!
மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT தான் காரணம் - OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக...
|
|
|


