பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் – இலங்கை செஞ்சிலுவை சங்க!

Thursday, August 10th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பூநகரி பிரதேச பிரிவில் உள்ள 15ற்கு மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்க கிளிநொச்சிக் கிளையினரால் பூநகரி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்தர பரீட்சைகள் அனைத்தும் நிறைவடையும் வரை குறித்த மாணவர்களுக்கு குடிநீர் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமைச்செயலக ஆளுநர், சபையின் துணைத்தலைவர், தலைமைச்செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிக் கிளையின் தலைவர் அ.வேழமாலிகிதன், செயலாளர் த.சேதுபதி, பொருளாளர், உறுப்பினர்கள் கிளை நிறைவேற்று அலுவலர் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106