பிரதமர் தலைமையில் புதிய பால் உற்பத்தி நிலையம் !
Monday, August 7th, 2017
மில்கோ நிறுவனத்தின் அம்பேவல புதிய பால் உற்பத்தி நிலையம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அமைச்சர் பி.ஹரிசன் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். உற்பத்தி நிலையத்திற்காக 500 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது.புதிய உற்பத்தி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பால் உற்பத்தி ஒரு இலட்சத்து பத்தாயிரம் லீற்றர்களில் இருந்து நான்கு இலட்சம் லீற்றர்களாக அதிகரிக்க முடியும் என்று மில்கோ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி மிஹிரிபத்த தெரிவித்துள்ளார்.
இந்த நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பால் உற்பத்தியாளர்களிமிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலின் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். நிறுவனம் தற்பொழுது பால் உற்பத்தியாளர்களிமிருந்து பாலை கொள்வனவு செய்து வருகிறது. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் இரண்டு இலட்சத்திற்கும் இடைப்பட்ட லீற்றர் பாலை கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மில்கோ நிறுவனம் தற்பொழுது வருடாந்தம் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 கோடி ரூபாவை வழங்கி வருகிறது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106