தொடரும் வரட்சி : வடக்கு – கிழக்கு அதிக பாதிப்பு!
Monday, August 7th, 2017
நாட்டின் 19 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அங்கு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 49 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனுடன் கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
பூநகரியின் ஒரு பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடை!
நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப...
|
|
|


