நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!
Thursday, March 23rd, 2023
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (22) இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில், டிலான் பெரேராவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க வழிமொழிந்தார்.
ஆளும்கட்சி உறுப்பினரால் தமது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால் வழிமொழியப்பட்டு குழுவின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகக் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரசாங்க மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழுவின் உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன், குலசிங்கம் திலீபன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, மயாதுன்ன சிந்தக அமல், கெவிந்து குமாரதுங்க, ரஜிகா விக்ரமசிங்க, இசுரு தொடங்கொட ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106