ஹம்பாந்தோட்டை துறைமுகம்: குத்தகைக்கு கொடுப்பதால் பல நன்மைகள்!
Friday, August 4th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குகின்றமை தொடர்பாக தேசிய ஊழியர்சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
பயனற்ற நிலையில் காணப்பட்ட இந்த துறைமுகம் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சுமையாக இருந்ததாகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்கள் கடனில் இருந்து முற்றாக விடுபடுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு இதன் மூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதனை கருத முடியும்.அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கான புரட்சிகர மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறைமுக ஊழியர்களுக்கும் தேசிய ஊழியர்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலை மாணவர் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான பொலிசாருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
வாகன விபத்து: இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு 15 பேர் வீதம் உயிரிழப்பு - அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!
இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கும் - சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபன குழுமத்தின...
|
|
|


