இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கும் – சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபன குழுமத்தின் தலைவர் அறிவிப்பு!
Tuesday, May 2nd, 2023
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபனமான China Merchants குழுமத்தின் தலைவர் இலங்கையில், சீனாவின் சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களின் முதலீடுகள், ஏறக்குறைய 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ள Miao Jianmin 15 திட்டங்களுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில், நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
2008 ஆம் ஆண்டு இலங்கை சந்தையில் நுழைந்த சீன மெர்சண்ட்ஸ் குழுமம், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1.68 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், வளமான ஹம்பாந்தோட்டை நிலத்தில்,சீனா அசாதாரண அத்தியாயத்தை எழுதும், அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முன்னோக்கி நகர்த்தும் என்றும் ஜியான்மின் நிகழ்வின்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106