சுன்னாகத்தில் வாள்வெட்டு: இருவர் படுகாயம் – மூவர் கைது!

Thursday, August 3rd, 2017

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம்  இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 23, 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மை காலமாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் மானிப்பாய் பகுதியிலும் இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் முன்னாள் போராளிகள் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது - இந்தியப் பிரதமர்!
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...