அதிநவீன கப்பல் கடற்படையிடம் கையளிப்பு!
Thursday, August 3rd, 2017
இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன கப்பல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் நேற்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில் இடம்பெற்றது .இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த யுத்தக் கப்பல் இலங்கையின் தேவைகருதி இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது கப்பலாகும் .இந்த கப்பல் மூலம் கடற்பாதுகாப்பு , அவசர நடவடிக்கை , மனிதாபிமான நடவடிக்கை , இடர்தொடர்பிலான நடவடிக்கை,கடல் முறைகேடுகளை தடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளமுடியும்.
மணித்தியாலத்திற்கு 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட கடல்மைல் தூரத்திற்கு செல்லக்கூடிய ஆற்றலை இந்த கப்பல் கொண்டுள்ளது.இந்த கப்பலில் நவீன சிறிய ஹெலிகப்டர் தரைஇறக்ககூடிய வசதிகளும் உள்ளது.இக்கப்பல் கடந்த மாதம் 28ம் திகதி கொழும்பு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106