டென்னிஸ் தரவரிசை: ஆன்டி முர்ரே முதலிடம்!
Thursday, August 3rd, 2017
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார் இருக்கிறார்.
உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்தில் தொடருகிறார்.
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கால்இறுதியில் வெளியேறிய செர்பியா வீரர் ஜோகோவிச் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.
வரும் சீசனில் ஜோகோவிச் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் தர வரிசையில் மேலும் சரிவை சந்திக்க நேரிடும். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே 3 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஹம்பர்க் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற அர்ஜென்டினா வீரர் லீனார்டோ மேயர் 89 இடங்கள் ஏற்றம் கண்டு 49-வது இடத்தை பெற்றுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106