மகாராணியிடம் விருது பெற்ற இளைஞனைபாராட்டிய ஜனாதிபதி !
Thursday, August 3rd, 2017
பிரித்தானிய மகாராணியிடம் இருந்து இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விருது வென்ற இலங்கையர்களான ரகித மாலேவன மற்றும் செனெல் வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார்.பொதுநலவாய நாடுகளில் உள்ள மக்களிடம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட திறன்களை பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.பொதுநலவாய நாடுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 இளைஞர்களுக்கு பிரித்தானிய மகாராணியால் இவ்வாறு இங்கிலாந்து பக்கிங்ஹம் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை அரசியலில் பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடுசெய்தல், இளைஞர்கள் மற்றும் பெண்களை விழிப்பூட்டல், பால் சமத்துவம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பில் அறிவூட்டுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்காக செனெல் வன்னியாரச்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2014ம் ஆண்டு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் பிரதிநிதியான செனெல் வன்னியாரச்சி கொழும்பு பல்கலைகழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான விசேட பட்டதாரியாவார்.எச்.ஐ.வீ வைரஸ் இற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தமைக்காக ரகித மாலேவனவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் வெளி மருத்துவ ஆராய்ச்சியாளராக செயற்பட்டுவரும் ரகித மாலேவன நாலந்தா கல்லூரியில் கல்வி கற்கும் காலப்பகுதியில் எச்.ஐ.வீ தொற்றுக்கான புதியதொரு தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106