நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அதிகமானோருக்கு சிகிச்சை!

Wednesday, August 2nd, 2017

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இலவச மருத்துவ சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள் என்று வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. நிபுணத்துவ வைத்திய சேவையும் வழங்கப்படுகிறது. ஆளணி வளம் தொடர்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணப்படும  தலைவர் டொக்டர் அஜித் மென்டிஸ்   கூறினார். வைத்தியசாலையில் 600 கட்டில்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் போதனா வைத்தியசாலையாக இது முன்னெடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

Related posts:


கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று - எச்சரிக்கை விடுத்...
குளவி கொட்டியதில் 25 மாணவர்கள் காயம் - 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் - கிளிநொச்சி மகா வித்தியாலயத்த...
குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!