ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, August 1st, 2017
உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Related posts:
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
முட்டை உற்பத்தியாளர்கள் நெகிழ்வுப் போக்கை காட்டினால் இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் நளின் தெர...
பிரதேச சபையின் நிதி பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபை...
|
|
|


