மருத்துவ சபையின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் குற்றச்சாட்டு!
Saturday, July 29th, 2017
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக மாலபே சைட்டம் கல்லூரியில் இருந்து பணம் பெற்று கொண்ட ஒருவரை சுகாதார அமைச்சர் நியமிக்கவுள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த குற்றச்சாட்டை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே முன்வைத்துள்ளார். இதன்மூலம் சைட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக புகையிலை நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது உலக நியதியை மீறும் செயல் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுக்குள் கொழும்புத்துறைமுகமும் இணைவு!!
ஈ - தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ள...
|
|
|


