நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

Friday, July 28th, 2017
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத முற்பகுதியில் மூன்று விசைப்படகுகளுடன் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 15 மீனவர்கள் காரைநகர்க் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் ஏற்கனவே ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த மீனவர்களை அடுத்த மாதம்- 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106