வடக்கின் போர் : யாழ் மத்தி நிதான ஆட்டம்
Friday, March 11th, 2016
வடக்கின் போர் கிரிக்கெற் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி இன்றைய நாள் முடிவில் 65.5 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து 6 இலக்குகளை இழந்து 165 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இதில் யாழ் மத்திய கல்லூரி அணிசார்பாக அணித்தலைவர் அலன்ராஜ் 34 ஓட்டங்களுடனும் பிரியலக்ஷன் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கிருபாகரன் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக நிலோஜன் கானமிர்தன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை கைப்பற்றினர்.
முன்னதாக தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோண்ஸ் கல்லூரி அணி 53.3 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து 164 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. அணிசார்பாக துடுப்பாட்டத்தில் கிசாந்துஜன் 31 ஓட்டங்களுடனும் ஜதுஷன் 28 ஓட்டங்களுடனும், கபில்ராஜ் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்
பந்துவீச்சில் யாழ் மத்தியகல்லூரி சார்பாக முறையே தெஸ்பியன்ராஜ். தசோபன், அலன்ராஜ் ஆகியோர் 4,3,2 இலக்குகளை கைப்பற்றினர்.
இன்னமும் ஒருநாள் மீதமுள்ள நிலையில் போட்டி மிக விறுவிறுப்பாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106