சிறுப்பிட்டியில் மோட்டார்ச் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!
Thursday, July 27th, 2017
சிறுப்பிட்டி பருத்தித் துறை பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு எதிரில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் புதன்கிழமை(26) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். புத்தூரிலிருந்து கோப்பாய் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மேற்படி பகுதியிலுள்ள வீதியில் காணப்படும் பெரு வளைவையும் பொருட்படுத்தாமல் வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தியுள்ளனர். அவ்வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்ச் சைக்கிள் வீதியைக் கடக்க முற்பட்ட அப் பகுதியைச் சேர்ந்த வயோதித் தாயாரை பலமாக மோதித்தள்ளியது.
சம்பவத்தில் வயோதிபத் தாயின் கால் முறிவடைந்துள்ளது. மோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞனும் படுகாயங்களுக்குள்ளானார். உடனடி யாக இருவரையும் மீட்ட அப் பகுதி பொதுமக்கள் சிகிச்சைகளுக்காகக் கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் போது மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் சிறு காயங்களுக்குள்ளானார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106