டெங்கு ஒழிப்பு திட்டம் – நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

Thursday, July 27th, 2017

டெங்கு ஒழிப்பு திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை  பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. க இது நடைமுறைப்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்காக நாளை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் மாணவர்கள், பெற்றோர்களின் கூடிய ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சிரமதான நடவடிக்கைகளுக்காக பொருத்தமான உடையுடன் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களிடம் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புகை விசிறல், நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

Related posts:

மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது - சட்டமா அதிபர் அறிவிப்...
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - வர்த்தக அமைச்சர் பந்துல ...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன - இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்திப்பு - இந்தியாவின் வளர்...