தோழர் தர்ஷனின் தந்தையாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!
Wednesday, July 22nd, 2026
….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேசத்தின் உதவி நிர்வாக செயலாளர் தோழர் தர்சனின் தந்தையார் ரெங்கையா மருதையின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தனது 65 ஆவது வயதில் கடந்த 21 ஆம் நாளன்று காலமான அமரர் ரெங்கையா மருதையின் பூதவுடல் சாவகச்சேரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் அமரரது பூதவுடகுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பிரிவால் துயருற்றிருந்த உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான கமலேந்திரன் கந்தசாமி, தோழர் புரட்சிமணி,
கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ, கட்சியின் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106