இராணுவத்தின் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது – இந்தியப் பிரதமர்!
Wednesday, July 26th, 2017
இராணுவத்தின் அளப்பரிய தியாகத்தாலும் வீரத்தாலும் நாடு இன்று பாதுகாப்பாக உள்ளதென, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த போரில் பெருமளவான ராணுவத்தினர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ள நிலையில், அதனை நன்றியுடன் நினைவுகூர வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் மூண்ட போர் ‘கார்கில் போர்’ எனப்படுகிறது. குறித்த போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பயங்கரவாதத்திற்கு அடிபணியோம்: பிரஸ்ஸல்ஸில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!
உயிருக்கு போராடிய பெண்! அவசரமாக தரையிறங்கிய விமானம்!
''ஆளில்லா விமானம் மூலம்வெனிசுலா அதிபரை கொல்ல சதி !
|
|
|


