சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்
Wednesday, July 26th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை(25) யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டது.இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் செல்வதற்குக் காரணமான குற்றச்சாட்டில் லலித் ஜயசிங்க கடந்த- 15 ஆம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106